ஈழத்து திருச்செந்தூர் என போற்றப்படும். மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இன்று காலை பட்டிப்பொங்கல் விழா சிறப்பாக கொண்டாட்டப்பட்டது. பசுக்கள் அலங்கரிக்கப்பட்டு பொங்கல் பொங்கப்பட்டு பூஜைகளும்
நடைபெற்றன.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ கு.சிற்சபேசன் தலைமையில் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன்
பெருமளவான அடியார்களும் கலந்துகொண்டனர். ‘குலம்காக்கும் பசுவை காப்போம்’ எனும் தொனிப்பொருளில் பட்டிப்பொங்கல் விழா சிறப்பாக நடாத்தப்பட்டது.
