மட்டக்களப்பு காத்தான்குடியிலிருந்து இம்முறை புனித ஹஜ் கடமைக்காக மக்காவுக்கு செல்லும் ஹாஜிமார்களை வழியனுப்பும் வைபவம் நேற்று காத்தான்குடி ஜாமி யுழ்ழாபிரீன் பெரிய ஜூம்ஆப் பள்ளிவாயலில் இடம்பெற்றது.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவன சம்மேளனங்களின் ஏற்பாட்டில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வானது, காத்தான்குடி பள்ளிவாயல்கள், முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவரான பொறியாளர் ஏ.எம்.தௌபீக் தலைமையில் நடைபெற்றது. சம்மேளனத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் இல்ஹாம், சம்மேளன பிரதி தலைவர்கள், பள்ளிவாயல் நிர்வாகிகள்; என பலரும் இதில் கலந்து கொண்டனர்.