ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னர் பாதுகாப்புத் தரப்பால் மூடப்பட்ட, மட்டக்களப்பு காத்தான்குடி ஜாமியுல் அதர் பள்ளிவாயலில் மீண்டும் தொழுகைகள் நடைபெறுகின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவால், ஜனாதிபதியிடம் முன் வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய, 5 வேளை தொழுகைக்காக பள்ளிவாயல் திறக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை, சுபஹ் தொழுகையை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பொதுச் செயலாளரும் புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆப் பள்ளிவாயலின் இமாமுமான இல்ஹாம் பலாஹி
நடாத்தினார்.
பள்ளிவாயலுக்கு இன்று காலை விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மௌலானா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் முபின் உட்ட பிரதிநிதிகள் பள்ளிவாயலைப் பார்வையிட்டதுடன், காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகளுடன் கலந்து உரையாடினர்