மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தைப்பூச விசேட வழிபாடுகள் ஆலயகுரு பிரம்மஸ்ரீ பாலகிருஷ்ண சர்மா தலைமையில் சிறப்பாக இடம்பெற்றன. முத்துமாரியம்மனுக்கு விசேட அபிஷேகமும் நடைபெற்றது. விவசாயிகள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். பூஜைகளின் பின்னர் ஆலயத்திற்கு அருகிலுள்ள வயற்காணியில் புதிர் அறுவடை நிகழ்வு ஆலயக்குருக்கள் தலைமையில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.