மட்டக்களப்பு அமிர்தகளி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த ஆடி அமாவாசை தீர்தோற்சவத்தினை முன்னிட்டு காவடி கற்புரத்தின் அனுசரணையில் கிழக்கு பிராந்தியத்தின் மட்டக்களப்பு டான் கலையகத்தினால் தாகசாந்தி நிகழ்வு நடைபெற்றது.
டான் ரீவி சந்தை படுத்தல் முகாமையாளர் வினோத் தியாகராஜா தலைமையில், டான் ரீவியின் மட்டக்களப்பு கிளை ஊழியர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தாகசாந்தி நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர். ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்தோற்சவத்தினை முன்னிட்டு தாகசாந்தி நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.