மட்டக்களப்பு திருப்பெருந்துறையில் பொலிஸாருக்காக தனிமைப்படுத்தும் நிலையம்

0
495

மட்டக்களப்பு திருப்பெருந்துறை தொழில் பயிற்சி நிலையம் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான தனிமைப்படுத்தும் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலை காரணமாக மாவட்டம் கடந்து மாவட்டம் வருகை தரும் நபர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்கீழ் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான தனிமைப்படுத்தல் நிலையமாக மட்டக்களப்பு திருப்பெருந்துறை தொழில் பயிற்சி நிலையம் மாற்றப்பட்டு பொலிஸ் உத்தியோகத்தர்களினால் துப்பரவு செய்யும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன