கொரோனா தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் பயணத்தடைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட அனைத்து பகுதிகளும் மூன்றாவது நாளாகவும் முற்றாக முடக்கப்பட்டுள்ளது.
பயணத்தடைக்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பினையும் வழங்கிவருகின்றனர்
இதனைத்தொடர்ந்து நகரின் பல பாகங்களிலும் படையினரும் பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் பயணத் தடையை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும்; முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.