மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தி கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று மட்டக்களப்பு நகரில் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் என் .சுந்தரேசன் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகர் காந்தி பூங்கா முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய மக்கள் சக்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கோப்புக்குழு தலைவருமான சுனில் கந்தன் நெத்தி இவ்வாறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர் .
இதன்போது குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக கருத்தினை தெரிவித்த சுனில் கந்தன் நெத்தி, விசேட விதமாக தற்போது நாட்டின் நிலைமையில் தற்போதைய அரசினால் நாட்டின் பாதி மக்கள் நடு வீதிக்கு தள்ளப்பட்டுள்ளனர் , நாட்டுமக்களுக்கான அத்தியாவசிய தேவையான மருந்து , எரிபொருள்,உணவு, உரம்,கல்வி போன்றவற்றை இல்லாது செய்து விட்டு தற்போது மக்களின் தொழிலாளியும் இல்லது செய்துள்ளது இந்த அரசு , இன்று ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது திங்கள் முதல் வீட்டில் இருந்து தொழில் செய்யுமாறு,அப்படியென்றால் தொழில்சாலைகளில் தொழில் புரிபவர்கள் எவ்வாறு வீட்டில் இருந்து தொழில் செய்வது,தொழில் சாலைகளின் இயந்திரங்களை வீட்டுக்கு கொண்டுவந்தா தொழில் செய்வது , இந்த அரசாங்கம் தான் வேலை நிறுத்தங்களை செய்கின்றது . முன்பு மக்கள் வேலைநிறுத்தங்களை செய்தார்கள்,இப்போது அரசாங்க வேலை நிறுத்தங்களை செய்கின்றது , மக்களை வேலைக்கு வரவேண்டாம் என அரசு கூறுகின்றது காரணம் எரிபொருள் இல்லை, மருந்துகள் குடிக்க வேண்டாம் , நோயாளியாக வேண்டாம் என கூறப்படுகிறது, காரணம் மருந்துகள் இல்லை,பாடசாலைகளுக்கு வரவேண்டாம் என கூறப்படுகின்றது , காரணம் கற்றல் உபகரணங்கள் இல்லாத நிலையால் ,கடைகளுக்கு வரவேண்டாம் என கூறுகின்றனர் ,காரணம் கடைகளில் பொருட்கள் இல்லாத காரணத்தினால் , உண்ண வேண்டாம் இரண்டு வேலை உணவு உண்ணுங்கள்என கூறுகின்றனர் காரணம் உணவு உண்பதற்கு உணவு இல்லாத காரணத்தினால் ,இவைகளை ஏன் கோட்டாபாயவும்,ரணிலும் எமக்கு இதை கூறுகின்றனர், நாட்டு மக்களின் அத்தியாவசிய தேவையினை தீர்க்க முடியாத அரசாங்கம் எவ்வாறு அரசாங்கமாக இருக்க முடியும்,எவ்வாறு நாட்டை ஆட்சி படுத்துபவர்காளாக இருக்கமுடியும்,எனவே நாங்கள் அரசிடம் கேற்கின்றோம் மக்களை வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும் கூறும் அரசாங்கம் நாட்டை வழிநடத்துவது எவ்வாறு,இதனை நாட்டு மக்கள் அறிந்துகொள்ளவேண்டும், இப்போது விசேட சத்திரசிகிச்சை வைத்தியசாலைகளுக்கு எரிபொருள் வழங்க முடியாத நிலை உள்ளது.
இலங்கையில் தனியார் வைத்தியசாலைகளில் விசேட சத்திரசிகிச்சை பிரிவு 48 உள்ளது அதில் இதுவரை 36பிரிவுக்கு எரிபொருள் வழங்குவதை இடைநிறுத்தப்பட்டுள்ளது, எரிபொருள் வழங்கப்படுவதில்லை,
ஜெனரேட்டர்கள் பாவிக்கமுடியாதுள்ளது,அதிலும் அரசு மின்சாரத்தை துண்டிக்கின்றது,இவ்வாறான நிலையில் நோயாளி ஒருவர் மரணமடைந்தால் அதற்கு யாரு பொறுப்பு கூறுவது யார்,அரசுக்கு அத்தியாவசியமானது, அவசரமானது எது என்பது தெரியாதுள்ளது,இப்போது அரசாங்கம் என்ன செய்கின்றது.
கோட்டாபய ராஜபக்ச பதவிக்கு வரும்போது இருந்த பில்லியன் 7.9 டொலர் பெறுமதியான வெளிநாட்டு பொருளாதாரத்தை
பூஜ்யத்திற்கு வீழ்த்திவிட்டு நாட்டுமக்கள் தேவைப்பாடுகளை நிறுத்துகின்றனர்,நாங்கள் கேற்கின்றோம் இதுதான் கோட்டபாய ராஜபக்ச கொண்டுவந்தசௌபாக்கிய திட்டமா .இது சௌபாக்கிய திட்டம் இல்லை, மக்களை நாசமாக்கிய திட்டம் ,இறுதியில் நாட்டின் வளத்தை சூறையாடிவிட்டு,கொள்ளையர்கள் ஒன்றுசேர்ந்து நாட்டி வளத்தை கொள்ளையடித்து விட்டு,இப்போது மக்களின் கூறுகின்றனர் பிரச்சினைக்கு தனியாக தீர்வு காணுங்கள் என்று ,ஆனால் இது தனியாக தீர்வு காணும் விடயம் அல்ல, சமூகம் ஒன்று சேர்ந்து இதற்கான தீர்வு காண வேண்டும்.
எனவே நாட்டு மக்களை ஒன்று சேர்ந்து தீர்வுகாண கோட்டாபய
ராஜபக்சவுக்கும்,ரணிலுக்கு முடியாது,எனவே கோட்டாபய ராஜபக்சவுக்கும் ,ரணிலுக்கும் அனைவருக்கும் கூறுகின்றோம் அனைவரும் வெளியேறுங்கள்,நாட்டுமக்கள் தமக்கு விரும்பிய அரசாங்கத்தை நிலைநாட்ட இடமளித்துவிட்டு,அதற்கான அதிகாரத்தையும் கொடுத்துவிட்டு போங்கள்,அப்படி போகாவிட்டால் தற்போது வீதியில் இருக்கின்ற மக்கள் வீடுகளுக்கு போகாமல் இந்த அரசை விரட்டியடிப்பார்கள் என்பது நிச்சயம் , அதற்காக தேசிய மக்கள் சக்தி என்ற வகையில் மக்களை ஒன்று சேர்ப்போம்,அத்தோடு நாடுமுழுவதும் மக்களை ஒன்று சேர்ப்பதுமட்டுமல்ல ,சர்வதேச ரீதியில் மக்களை ஒன்று சேர்ப்பதற்காகான வேலைத்திட்டங்களை மட்டக்களப்பில் ஆரம்பித்துள்ளோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கோப்புக்குழு தலைவருமான சுனில் கந்தன் நெத்தி தெரிவித்துள்ளார்.