மட்டக்களப்பு புலூமிங் பட்ஸ் முன்பள்ளி மாணவர்களினால் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தியதான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது

0
150

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள புலூமிங் பட்ஸ் முன்பள்ளி மாணவர்களினால் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தியதான நிகழ்வு,
முன்னெடுக்கப்பட்டது.
புலூமிங் பட்ஸ் முன்பள்ளி மாணவர்களினால் சிறுவர் உரிமை உட்பட பல்வேறு வகையான அவர்களின் கோரிக்கையினை வெளிப்படுத்தும் வகையிலான கவன ஈர்ப்பு நடாத்தப்பட்டது.
சிறுவர் உரிமையினை பாதுகாப்போம்,எங்களை துஸ்பிரயோகம் செய்யாதீர்கள்,எங்களை துன்புறுத்தாதீர்கள் போன்ற வாசகங்கள் தாங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்ததுடன் கைகளில் கொடிகளையும் ஏந்தியிருந்தனர்.
புலூமிங் பட்ஸ் முன்பள்ளி அதிபர் திருமதி கமலிட்டா தேவநம்பி தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
வீதியின் இரு மருங்கிலும் மாணவர்கள் பல்வேறு கலாசார உடைகளை அணிந்து தமக்கான உரிமையினை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற நிகழ்வில், பெருமளவான மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோரகள்; கலந்துகொண்டனர்.
இதன்போது வீதி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.