மட்டக்களப்பு பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் டெங்கு ஒழிப்பு புகைவிசுறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் கீழ் மட்டக்களப்பு காதார வைத்திய அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் அதிகளவில் நோயாளர்கள் இனங்காணப்பட்ட பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள அமிர்தகழி, மட்டிக்களி, பாலமீன் மடு ஆகிய பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் புகைவிசுறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ.உதயகுமார் வழிகாட்டலின் மட்டக்களப்பு பொது சுகாதார பரிசோதகர் அலுவலக தெளிக்கருவி இயக்கவியாளர்களினால் புகைவிசுறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன.