மட்டக்களப்பு வாகரையில் இராணுவத்தினரால் வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன

0
66

மட்டக்களப்பு வாகரை ஊரியன்கட்டு கிராம சேவகர் பிரிவிலுள்ள விவசாயக் காணியொன்றிலிருந்து, ராணுவத்தினரால் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.


விவசாய நடவடிக்கைக்காக, நீர்க்குழாய் பொருத்த, குழியொன்றை வெட்டியபோது, மர்மப் பொருளொன்றை அவதானித்த காணி உரிமையாளர், அது தொடர்பில்
அருகில் உள்ள 233 ஆவது வாகரை ,ராணுவப் படைப் பிரிவின், ,ராணுவ புலனாய்வாளர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ ,டத்திற்கு நேரில் சென்று நிலமைகளை அவதானித்த ,ராணுவத்தினர், கதிரவெளி விசேட அதிரடிப் படையினரின் ஒத்துழைப்புடன்
வெடி பொருட்களை மீட்டு, நீதிமன்ற நடவடிக்கைகாக அவற்றை பொலிஸாரிடம் பாரப்படுத்தினர்.


81 மோட்டார் துப்பாக்கிகள், அதற்கு பொருத்தும் பரல்-1, பை போட்-1 மற்றும் வேஸ் பிளேட்-1 ஆகியனவே மீட்கப்பட்டனவாகும்.