மட்டக்களப்பு வெல்லாவெளி -வக்கியல்ல பிரதான வீதி ஊடாக பயணித்த சொகுசு கார், சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து
பாலத்திலிருந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 37ஆம் கிராமம் தும்பாலை பாலத்திற்கு அருகிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மரண சடங்கிற்குச் சென்றுவிட்டு குருமண்வெளி கிராமத்திற்கு திரும்பிச் சென்றுகொண்டிருக்கும் போதே விபத்துச் சம்பவித்துள்ளதாகத் தெரியவருகின்றது. காரில் பயணித்த கணவன், மனைவி, குழந்தைகள் உட்பட 5 பேர் காயமடைந்த நிலையில், களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.