மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய உற்சவத்தினை முன்னிட்டு சிறுவர் வடமோடி கூத்து நிகழ்வு

0
88

மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய உற்சவத்தினை முன்னிட்டு கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறையின் ஏற்பாட்டில் பாரம்பரிய அரங்க விழாவில் நேற்று மாலை சிறுவர் வடமோடி கூத்து நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்க முன்பாக கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைதுறையின் இணைப்பாளர் பேராசிரியர் சி.ஜெயசங்கர் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் மட்டக்களப்பு எல்லை வீதி மகா நரசிங்கவைர சுவாமி ஆலய அறநெறிப்பாடசாலை மாணவர்களினால் ஆளுமையான ஒளவையாள் என்னும் சிறுவர் வடிமோடிக்கூத்து அரங்கேற்றப்பட்டது. கூத்தின் அண்ணாவியராக சி.ஞானசேகரம், ஏடு பார்ப்பவராக விரிவுரையாளர் து.கௌரீஸ்வரன் மற்றும்
பல்வேறு கலைஞர்களாலும் கூத்து அரங்கேற்றப்பட்டன.