மட்டு’உதயதேவி’ புகையிரத விபத்தில் வயோதிப் பெண் உயிரிழப்பு

0
240

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த ‘உதயதேவி’ புகையிரத விபத்தில்82 வயதுடைய வயோதிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு-பாலயடித்தோணா பிரதேசத்தில் நேற்று மாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

பாலயடித்தோணா பிரதேசத்தைச்சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான கணபதிப்பிள்ளை வேலாத்தா என்பவரே பலியானவர்.

மனநேயாளியான மற்றும் செவிப்புலனற்ற இவர் புகையிரத பாதையைக்கடக்க முற்பட்டபோது விபத்தில் சிக்கியிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

திடீர் மரணவிசாரணையதிகாரி எம்எஸ்எம். நஸிர்முதற்கட்ட நீதி விசாரணைகளை ஆரம்பித்ததுடன் சந்திவெளி பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.