அம்பாறை–மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான பெரியநீலாவணைக் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள இரணுவச் சோதனைச் சாவடியில் பயணக் கட்டுப்பாடுகளையும், சுகாதாரவிதி முறைகளை மீறி பயணிப்பவர்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வருவதோடு அநாவசியமான பயணங்களை மேற்கொள்வோர் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் நுழைவோரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அம்பாறை மாவட்டத்திற்குள் நுழைவோரும் தடுத்துநிறுத்தப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தப்படுத்தப்பட்டனர்.
வீதிகளில் சுகாதார விதிமுறையை பின்பற்றாது நடமாடுபவர்கள், பிரதேச செயலகங்களின் அனுமதிப்பத்திரம் இன்றி விற்பனையில் ஈடுபடுபவர்கள் பரிசோதிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டு வருகின்றனர்.
அத்தியாவசியமான சேவையில் ஈடுபடுபவர்கள் மற்றும் அவசியத்தேவை காரணமாக பயணிப்பவர்கள் தவிர தேவையற்ற விதத்தில் பயணிப்பவர்கள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர்.
நாட்டையும், நாட்டு மக்களையும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கு இராணுவத்தினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குn பாதுமக்கள் ஒத்துழைப்புவழங்கவேண்டும் என கல்முனை பிரதேச இராணுவத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.