மட்டு.ஆறுமுகத்தான்குடியிருப்பு
பேச்சியம்மன் ஆலய வருடாந்த உற்சவம்

0
169

மட்டக்களப்பு ஆறுமுகத்தான்குடியிருப்பு ஸ்ரீபேச்சியம்மன் ஆலயத்தின் 44ஆம் வருட சடங்கு உற்சவ விழா மற்றும் தீ மிதிப்பு
சமுத்திர தீர்த்தத்துடன் நேற்று நிறைவு பெற்றது.ஆலயத்தின் உற்சவ விழா கடந்த 22ஆம் திகதி ஆரம்பமாகியதுடன் தொடர்ந்து தினமும் விசேட பூசைகள் இடம்பெற்று வந்தன. வீதி ஊர்வலம்,விசேட ஆராதனை, வீரகம்பம் வெட்டுதல்,
பலி கிரியைகள், தீமூட்டுதல், தீமிதித்தல், நெல்லுக்குற்றுதல் என்பனவற்றுடன் இறுதியாக விநாயகர்பானை எழுந்தருளல்,பள்ளய சடங்கு,சமுத்திர தீர்த்தம் அன்னதான நிகழ்வுடன் ஆலய உற்சவம் நிறைவுபெற்றது.

கொரோனா வைரஸ் தொற்றுகாரணமாக கடந்த மூன்று வருடங்களாக இவ் ஆலயஉற்சவநிகழ்வுகள்இடம்பெறவில்லையென்பதுடன் இம்முறை பெரும் எண்ணிக்கையிலான அடியார்கள் கலந்து கொண்டிருந்தனர்.