மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பொதுமக்களுக்கான கொரோனா வைரஸ் தொற்றுக்கான விசேட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையின் இன்றைய தினம் மட்டக்களப்பு ஊறணி அமெரிக்கன் மிஷன் மண்டபம் மற்றும் புதூர் விக்னேஸ்வரா வித்தியாலத்திலும் முன்னெடுக்கப்பட்டது.
இன்றைய தினம் மட்டக்களப்பு ஊறணி அமெரிக்கன் மிஷன் மண்டபம் மற்றும் புதூர் விக்னேஸ்வரா வித்தியாலத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் பொதுமக்கள் வருகை தந்து தங்களுக்குரிய தடுப்பூசியினை பெற்றுக்கொண்டனர்.
இதுவரை கொரோனா தொற்றுக்கான எதுவித தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்கள் முழுமையான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுதல் அவசியமாக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பொதுமக்களுக்கு விசேட சந்தர்ப்பத்தினை வழங்கும் வகையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன் வழிகாட்டலில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ.உதயகுமார் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.