மட்டு.ஏறாவூரில் புதிதாக
அமைக்கப்பட்ட வாசிகசாலை திறப்பு

0
242

மட்டக்களப்பு – ஏறாவூர் – அந்நிழாமிய்யதுல் மஹ்ஃபிய்யா அறபிக்கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட வாசிகசாலை இன்று சம்பிரதாயபூர்வமாக திறக்கப்பட்டது.
ஸதகா அறக்கட்டளை நிதியத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட வாசிக சாலைத்திறப்புவிழாவில் நிதியத்தின் பிராந்திய தலைவர் அபுல்ஹஸன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

மௌலவி ஏ இப்றாஹிம் (றப்பானி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மௌலவி நவாஸ் மற்றும் மௌலவி எம். முபாறக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.கடந்த சுமார் ஆறு வருடங்களாக இயங்கிவரும் ஏறாவூர் – அந்நிழாமிய்யதுல் மஹ்ஃபிய்யா அறபிக் கல்லூரியில் வாசிகசாலைக்கு அறபு, தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில உசாத்துணை நூல்கள் மற்றும் தளபாடமும் இதன்போது வழங்கப்பட்டன.