மட்டு.கல்குடா பிரீமியர் லீக்
கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடர்

0
245

மட்டக்களப்பு ஓட்டமாவடி பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற கல்குடா பிரீமியர் லீக் கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதியாட்டத்தில் பதுரியா -மாஞ்சோலை அல் இஹ்ஸான் கிரிக்கெட் அணி வெற்றி பெற்று கிண்ணத்தைக் கைப்பற்றியது.

வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட கல்குடா பிறீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மட்டக்களப்பு கல்குடாவிலுள்ள 24 கிரிக்கெட் அணிகள் களம் கண்டதுடன், இறுதிப்போட்டியில் பதுரியா மாஞ்சோலை அல்- இஹ்ஸான் கிரிக்கெட் அணியும் வாழைச்சேனை அல்- ஹக் கிரிக்கெட் அணியும் நேற்று மோதின.

முதலில் துடுப்படுத்தாடிய அல் இஹ்ஸான அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

170 எனும் வெற்றி இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய அல் ஹக் அணி 16 ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அல் ஹக் அணிக்கெதிராக 41 ஓட்ட வித்தியாசத்தில் இவ்வெற்றியைப் பதிவு செய்து கிண்ணத்தை வென்று சம்பியனானது அல் இஹ்ஸான் அணி.

போட்டியின் தொடர் ஆட்டக்காரர் விருதினை 160 ஓட்டங்களுடன் 16 விக்கட்டுக்களை வீழ்த்திய அல் இஹ்ஸான் அணியின் நட்சத்திர வீரர் முஹம்மது அஸ்பர் போட்டியின் சிறப்பாட்டக்காரராக 13 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை வீழ்த்திய அல் இஹ்ஷான் அணியின் பிர்ணாஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டார்.

நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் றிகாஸ் தலைமையில் இடம் பெற்ற இக் கிரிக்கெட் சுற்றுப்போட்டி நிகழ்வில் வெற்றிக்கிண்ண்த்தை இறுதியாட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முன்னாள்
இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி வழங்கி வைத்தார்.

இறுதியாட்டத்தில் சிறப்பதிதியாக கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஏ.எம்.நௌபர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள்,கிரிக்கெட் வீரர்கள், ஆதரவாளர்கள், இரசிகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.