மட்டு.கல்லடி கடற்கரை தூய அன்னை
வேளாங்கண்ணி ஆலய திருவிழா

0
234

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் கத்தோலிக்க ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு கல்லடி கடற்கரை தூய அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று இடம்பெற்ற திருவிழா கூட்டுத் திருப்பலியுடன் கொடியிறக்கப்பட்டு 2022ஆம் ஆண்டுக்கான ஆலய திருவிழா நிறைவுபெற்றது.கடந்த 8ஆம் திகதி பங்குத்தந்தை லோரன்ஸ் லோகநாதன் அடிகளாரின் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நான்கு நாட்கள் திருவிழாவாக வருடாந்த திருவிழா சிறப்பிக்கப்பட்டு நேற்று மாலை இடம்பெற்ற நற்கருணை ஆராதனை வழிபாடுடன் அன்னையின் திருச்சொரூப பவனி மிக பக்திபூர்வமாக இடம்பெற்றது.

ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு இன்று இடம்பெற்ற விசேட திருவிழா கூட்டுத்திருப்பலியினை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசெப் பொன்னையா ஆண்டகையின் தலைமையில் பங்குத்தந்தையுடன் அருட்தந்தையர்கள் இணைத்து ஒப்புகொடுத்தனர்.ஆலய திருவிழாவினை சிறப்பிக்கும் வகையில் ஆயர் மற்றும் அருட் தந்தையர்களுக்கு நினைவு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இதனைதொடர்ந்து ஆலய முன்றலில் இடம்பெற்ற அன்னையின் திருச்சுரூப ஆசீருடன் ஆலய திருவிழா கொடியிறக்கப்பட்டு வருடாந்த திருவிழா நிறைவுபெற்றது.

திருவிழா திருப்பலியில் மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் பல பகுதிகளில் இருந்து வருகை தந்த பெருமளவான மக்கள் ஆலயத்திருவிழா திருப்பலியில் கலந்துகொண்டதுடன் திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்காக அன்னதானமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .