மட்டக்களப்பு கல்லடி கல்லடி பாமா ருக்மணி சமேத ஸ்ரீகிருஸ்ண சுவாமி ஆலய கும்பாபிசேக கிரியைகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் இன்று எண்ணெணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பாகங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் இன்றைய தினம் எண்ணெணைக்காப்பு சாத்தும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பிரதிஸ்டா பிரதமகுரு சிவஸ்ரீ நாராயண சண்முகநாத குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்களினால் கும்பாபிசேக கிரியைகள் நடைபெற்றுவருகின்றன.மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வரும் ஆலயத்தின் தலைவருமான தி.சரவணபவனின் தலைமையிலான நிர்வாகத்தினரால் சிறப்பான முறையில் கும்பாபிசேக ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.பாமா ருக்மணி சமேத ஸ்ரீகிருஸ்ண சுவாமி ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்ட பக்ஸ மகா கும்பாபிசேகம் நாளை காலை 7.38மணி தொடக்கம் 8.36மணி வரையிலான சுபவேளையில் மகா கும்பாபிசேகம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.