29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டு. கல்வி வலயத்தில் வினாத்தாள் அச்சிட்டதில் குழப்பநிலைக்கு யார் பொறுப்பேற்பது யார் என இலங்கை அரசாங்க ஆசிரியர்களின் சங்கம் கேள்வி?

மட்டக்களப்பு கல்வி வலயப் பிரிவில் நடை பெற்று வரும் பரீட்சைக்கு வினாத்தாள் அச்சிட்டதில் குழப்பநிலை ஏற்பட்டுள்ள யார் பொறுப்பேற்பது என இலங்கை அரசாங்க ஆசிரியர்களின் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ந. காஞ்சீவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை அரசாங்க ஆசிரியர்களின் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ந. காஞ்சீவன் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வி வலயத்தில் நடைபெறும் பரீட்சையில் இணைந்த கணிதம் பகுதி 2 இற்கான வினாத்தாளானது பகுதி 2 இற்கான தலைப்புடன் நேற்று நடைபெற்ற பகுதி 1 இற்கான வினாக்கள் அச்சிடப்பட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இவ் வினாத்தாளானது சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பே தயாரிக்கப்பட்டு வலயக்கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது. இருந்தும் இன்று இவ்வாறான ஒரு விடயம் நடைபெற்றுள்ளது.

மாணவர்களில் அக்கறையுள்ள சங்கம் என்ற ரீதியில் முறைப்பாடு ஒன்றை சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு எதிராக பதிவு செய்யவுள்ளதுடன் மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களை எமது தொழிற்சங்கம் கண்டிப்பதாகவும் செயலாளர் ந. காஞ்சீவன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles