மட்டு.காத்தான்குடியில் இரு வேறு
குற்றச்சாட்டுக்களுடன் மூவர் கைது

0
172

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி பிரதேசத்தில் வீட்டை உடைத்து பெறுமதியான லெப்டொப் கணணியைக் கொள்ளையிட்ட சந்தேசத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்
ஐஸ் போதைப்பொருள் விற்பனையிலீடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின் பேரில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் வழிகாட்டலில் பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையின்போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி எஸ்.ஏ.றஹீம் தெரிவித்தார்.
கைதான நபர்களிடமிருந்து சுமார் 4 இலட்சம் ரூபாய் பொறுமதியான லெப்டொப் கணணி மற்றும் 185 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

காத்தான்குடி மத்திய கல்லாரி வீதி மற்றும் தீன் வீதி ஆகிய இடங்களிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேச நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளவுடன் காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.