மட்டு. காத்தான்குடியில் காணாமல் போன 4 இலட்சம் ரூபா பணம் உரியவரிடம் ஒப்படைப்பு

0
221

மட்டக்களப்பு காத்தான்குடி ஆறாம் குறிச்சி இரும்புத்தைக்கா பள்ளிவாயல் வீதியில் வைத்து றிஸ்வி என்பவருடைய4 இலட்சம் ரூபா பணம் காணாமல் போன நிலையில், காத்தான்குடி முதலாம் குறிச்சி ஹஸைனிய்யா வீதியைச் சேர்ந்த முயீனுல் ஹக் மற்றும் கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த தெய்வநாயகம் தெய்வேந்தீரன் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில்பணம் வீதியில் கிடப்பதை அறிந்து காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பணத்தை தொலைத்தவர் அடையாளப்படுத்தப்பட்டு, காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி,காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரஹீம், பொலிஸ் பரிசோதகர் சியாம் முன்னிலையில் பணத்தை கண்டெடுத்தவர்கள் உரியவரிடம் ஒப்படைத்தனர்.
பணத்தை கண்டெடுத்து ஒப்படைத்த இருவருக்கும் பொலிஸ் அதிகாரிகள் பாராட்டுக்களை தெரிவித்ததுடன் பணத்தை தொலைத்த றிஸ்வியும் தமது நன்றியை தெரிவித்தார்