அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கர்பலா வீதி அலியார் சந்தியில் வைத்து ஐஸ் போதைப்பொருளுடன் நேற்றிரவு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேகநபர் 37 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் 10 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இச்சோதனை நடவடிக்கையின் போது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண
ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சில்வெஸ்டர்
விஜேசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.சி வேவிடவிதான ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.பி.பி.எம் டயஸ் தலைமையிலான குழுவினரசந்தேக நபரை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் சான்று பொருட்களுடன் பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக ஒப்படைத்துள்ளனர்.