மட்டக்களப்பு குருக்கள்மடம் மயான வீதியில் அமைந்துள்ள சவுக்குத் தோட்டத்தில் திடீரென தீப் பரவல் ஏற்பட்டுள்ளது.
தீ விபத்துச் சம்பவத்தில் அப்பகுதியில் நின்ற சுமார் 30ற்கு மேற்பட்ட சவுக்கு மரங்கள் தீக்கிரையாகின.
இளைஞர்கள், கிராம மக்கள், குருக்கள்மடம் இராணுவத்தினர் என பலரும் ஒன்றிணைந்து தீப் பரவலைக் கட்டுப்படுத்தினர்.