மட்டு. கொக்கட்டிச்சோலையில் சிங்கள மொழி பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்

0
58

கிழக்கு மாகாண இராணுவ பாதுகாப்பு படைப்பிரிவின் ஏற்பாட்டில் சிங்கள மொழி பயிற்சி நெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது.
கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை அண்டிய 150 மாணவர்களுக்கு சிங்கள மொழி பயிற்சி நெறியை நிறைவு செய்தமைக்கான திறமைச் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் கிழக்கு மாகாண இராணுவ சிரேஸ்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் செவந் குலதுங்க, 24 வது காலால் படை கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் அனில் பெரேரா, கிழக்கு படை தலைமையகத்தின் பிரிக்கேடியர் திப்த ஆரியசேன, 243 வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிக்கேடியர் சந்திம குமாரசிங்க மற்றும் உதவி பிரதேச செயலாளர், கல்வி திணைக்கள அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், மதகுருமார் என பலர் கலந்து கொண்டனர்.