மட்டு. சவக்காலையொன்றில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக தகவல்

0
786

மட்டக்களப்பு- பன்குடாவெளி சவக்காலையொன்றில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலொன்றுக்கு அமைய தேடும் பணி முன்னெடுக்கப்பட்டது.

வவுணதீவு விசேட அதிரடிப்படையினர் மற்றும் கரடியனாறு பொலிஸாரும் இணைந்து இயந்திரத்தின் உதவியுடன் அவ்விடத்தை தோண்டும் பணிகளில் ஈடுபட்டனர்.

குறித்த இடத்தில் விடுதலைப் புலிகளால் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் புதைக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் தோண்டுவதற்கு அனுமதி வழங்கியிருந்தது.

சவக்காலையின் கல்லறைகளுக்கு அருகில் தோண்டப்பட்டபோதிலும் எவ்வித வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லையென படையினர் தெரிவித்தனர்.

சுமார் இரண்டு மணிநேரமாக சவக்காலையின் பல இடங்கள் தோண்டப்பட்டபோதும் எவ்வித தடயங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.