மட்டு.சுவாமி விபுலானந்தர் முதியோர்
இல்லத்தில் முதியோர் தின நிகழ்வுகள்

0
292

மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தர் முதியோர் இல்லம் மற்றும் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தின் அனுசரணையில் சர்வதேச முதியோர் தின நிகழ்வுகள் நடைபெற்றது சர்வதேச முதியோர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் கல்லடி இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் எம் .பவளகாந்தன் தலைமையில் கல்லடி கிராம சேவையாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட முதியோர்களுக்கான முதியோர் தின பொதிகள் வழங்கப்பட்டது .

இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் கே .கருணாகரன் , உதவி மாவட்ட செயலாளர் எ. நவேஸ்வரன் , மண்முனை வடக்கு சமூக சேவை உத்தியோகத்தர் ராஜ்குமார், காந்தி சேவா சங்க தலைவர் செல்வேந்திரன் ஆகியோர் அதிகளாக கலந்துகொண்டு முதியோர்களுக்கான முதியோர் தின பொதிகளை வழங்கி வைத்தனர் .இந்நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் முதியோர் இல்ல வளாக ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளுடன் அதிதிகள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் முதியோர் இல்ல வளாகத்தில் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டன .

மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தின் பொதுச்செயலாளர் எஸ் .அருள்மொழி ஏற்பாட்டில் இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் எம் .பவளகாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மன்றத்தின் உபசெயலாளர் பி .முருகதாஸ் , சுவாமி விபுலானந்தர் முதியோர் இல்ல உறுப்பினர்கள் கலந்துகொண்டு முதியோர்களுக்கான பொங்கல் பொதிகளை வழங்கி வைத்தனர்