‘கிழக்கு மாகாணத்தில் ஜனநாயக பங்குதாரர்களுக்கான ஓர் அரங்கத்தை உருவாக்கல’; என்ற தொனிப்பொருளில் கலந்துரையாடல் நிகழ்வொன்று செங்கலடியில் நடைபெற்றது.கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்திக்காக உள்ளூர் ஊடகவியலாளர்கள் சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் உள்ளுராட்சி சபை பிரதிநிதிகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்துவதன் மூலம் உண்மைத் தன்மை மற்றும் வெளிப்பாட்டுத் தன்மையை அதிகரித்தல் என்ற செயல் திட்டத்தின் முதலாவது தெளிவூட்டலும் இப்பிரதேசத்தில் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
அகம் மனிதாபிமான வள நிலையத்தின்; ஏற்பாட்டில் அமைப்பின் பணிப்பாளரும் தலைவருமாகிய கண்டுமனி லவகுகராசாவின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஏறாவூர்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சி.சர்வானந்தன்,உப தவிசாளர் கே.ராமச்சந்திரன்,செயலாளர் வ.பற்குணன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள்,சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்,சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைதெரிவித்தனர்
மனித உரிமை சார்ந்த விடயங்கள்,நில ஆக்கிரமிப்பு,போதைப்பொருள் பாவனை போசாக்கு உணவு வழங்கல்,குடிநீர் பிரச்சனை,சட்ட விரோத மதுபான உற்பத்தி,விவசாய செய்கையில் உள்ள தடைகள் மற்றும் யானை தொல்லை என்பன போன்ற மக்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அடையாளம் காணப்பட்டு அதற்கான தீர்வுகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.