மட்டு.திருப்பெருந்துறை குப்பை மேடு
பகுதியில் நான்கு தினங்களாக தீ பரவல்

0
227

மட்டக்களப்பு மாவட்டம் திருப்பெருந்துறை குப்பை மேடு பகுதியில் தொடரும் தீ காரணமாக தாம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
நீண்ட காலமாக குப்பைகளைக் கொட்டும் இடமாகக் காணப்பட்ட திருப்பெருந்துறை குப்பை மேடு பகுதியில் கடந்த நான்கு தினங்களுக்கும் மேலாக தீயுடனான புகை பரவிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீ பரவல் குப்பை மேடுகளுக்கு அப்பால் அயலில் உள்ள சென் ஜோன்ஸ் தொழில் பயிற்சி நிலையம் மற்றும் சென்.ஜோன்ஸ் ஆண்கள் இல்ல வளாக மரங்களிலும் பரவியுள்ளதாக நிறுவன முகாமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், தீ பரவல் மற்றும் புகை காரணமாக சுவாச ரீதியான பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இவ்விடயம் தொடர்பில் மாநாகர சபையின் பிரதி முதல்வரிடம் எமது டான் செய்திப் பிரிவு வினவிய போது குறித்த பகுதியில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அணைக்கப்பட்ட தீயின் புகை சிறிதளவில் வெளிவருவதாகவும் அதுவும் ஒரிரு தினங்களில் அணைந்து விடும் எனவும் மாநகர பிரதிமுதல்வர் சத்தியசீலன் எமது செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.