மட்டக்களப்பு திராய்மடு ஸ்ரீ வீரபத்தினி அம்மன் ஆலய கும்பாபிசேகத்தை முன்னிட்டு சங்காபிசேகமும் பால்குட பவனியும் சிறப்பாக இடம்பெற்றன.
அமிர்தகழி மாமாங்கபிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து பால்குடபவனி பிரதான வீதிகள் ஊடாக ஆலயத்தை வந்தடைந்தது.
ஆலயத்தில் சங்காபிசேகமும், விசேட யாகபூஜைகள் நடைபெற்றதுடன்,நாட்டு மக்களுக்கு நல்லாசி வேண்டி விசேட ஆராதனைகளும் முன்னெடுக்கப்பட்டன.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ .துரைராஜா ரஜனிகாந் தலைமையில் நடைபெற்ற வழிபாடுகளில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.