மட்டக்களப்பு நகரில் முன்னெடுக்கப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் 8 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் மட்டக்களப்பு நகரில் பொலிஸாரினால் கைது செய்யப்படவர்கள் மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 110 நபர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் 8 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர் கிரிசுதன் தலைமையில் மட்டக்களப்பு வைத்தியசாலை ஆய்வு கூட தொழில் நுட்பவியலாளர்களுடன் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் ரபிட் அன்டிஜன் பரிசோதனைகளை முன்னெடுத்திருந்தனர்
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொவிட்-19 கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மற்றும் எழுந்தமான ரபிட் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.