மட்டு. நகரில் கேரளா கஞ்சாவுடன் நால்வர் கைது

0
200

மட்டக்களப்பு நகர் பகுதியில் கேரளா கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றிக்கு அமைய மட்டக்களப்பு நகர் பகுதியில் கேரளா கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேருடன் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பி எஸ் .பண்டார தெரிவித்தார்.

மட்டக்களப்பு திருப்பெருந்துறை பகுதியில் பயணித்த வாகனத்தை சோதனையிட்டபோது 155 கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவரும், ஊறணி சந்தி பகுதியில் 2200 மில்லி கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவரும் இதேவேளை கல்லடி திருச்செந்தூர் பகுதியில் 73 கிராம் கஞ்சாவுடன் ஒருவரும், கல்லடி பகுதியில் பயணித்த மோட்டார்சைக்கிளுடன் 3100 மில்லி கிராம் கஞ்சாவுடன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர்கள் மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் நீதிமன்ற மன்ற சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு நீதவான் நீதி மன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளதாக குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

தற்போது மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைவஸ்து பாவனை மற்றும் போதைப்பொருள் விற்பனை தொடர்பில் மட்டக்களப்புமாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லக்சிறி விஜேசேன ஆலோசனையின் கீழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க மற்றும் , மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல் ஆர் .குமாரசிறி ஆகியோரின் வழிகாட்டலில் மாவட்ட குற்றத்தடுப்பு

விசாரணை பிரிவு விசேட புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.