மட்டக்களப்பு மண்முனை பற்று பிரதேச பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன .
மண்முனை பற்று ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவில் வறுமைக்கோட்டின் கீழ் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்களினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கப்பட்டன .
மண்முனை பற்று உதவி பிரதேச செயலாளர் மற்றும் கணக்காளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் மண்முனை பற்று ஆரையம்பதி பிரதேச செயலக சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் ஆரையம்பதி பிரதேச வர்த்தகர்களின் நிதி அனுசரணையில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன .
முதலாவது கல்வி ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மண்முனை பற்று பிரதேச செயலக பிரிவில் வறுமைக்கோட்டின் கீழ் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி கற்றலை மேம்படுத்தும் வகையில் பிரதேச செயலாளர் என் . சத்தியானந்தி தலைமையில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன .
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எஸ் .லோஜினி ,கணக்காளர் வி . நாகேஸ்வரன் ,சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் டி .மதிராஜ் உட்பட சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.