மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான
பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் விசேட நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
ஜி.சுகுணனின் வழிகாட்டலின் கீழ் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ.உதயகுமார் தலைமையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் விசேட நடவடிக்கை இன்றைய தினம் சுகாதார சேவைகள் பணிமனையில் முன்னெடுக்கப்பட்டன .
சுகாதார சேவைகள் பணிமனையில் முன்னெடுக்கப்பட்ட
தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதகர்கள், பொது சுகாதார தாதிய உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.