மட்டு.புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ
பள்ளிவாயலில் உணவு வங்கி ஆரம்பம்

0
240

மட்டக்களப்பு காத்தான்குடி புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் உணவு வங்கி இன்று ஜூம் ஆ தொழுகையின் பின் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பள்ளி வாயிலின் தலைவரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான கே.எல்.எம்.பரீட் தலைமையில் நடைபெற்ற இதன் ஆரம்ப நிகழ்வில் பள்ளி வாயலின் செயலாளர் இர்பான் உட்பட பள்ளி வாயல் நிருவாகிகள் பள்ளி வாயல் இமாம்கள் கலந்து கொண்டனர்.

இவ் உணவு வங்கியினால் இப்பள்ளி வாயல் பகுதியிலுள்ள உணவு தேவையுடையோருக்கு உணவு வசதிகள் வழங்கப்படவுள்ளன.