மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவ விழா இன்று திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தொடர்ந்து 11 நாட்க்கள் உற்சவ நிகழ்வுகள் நடைபெற்று எதிர்வரும் 01ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் மஹோற்சவம் நிறைவுபெறவுள்ளது.
திருவிழாக்கள் யாவும் ஆலய தலைவர் வெ.மோகன்ராஜ் தலைமையில் ஆலய ஸ்தானிக குரு கணபதி பூஜா துரந்தார். சிவஸ்ரீ.மு.சண்முகம் குருக்களின் வழிகாட்டலில் மஹோற்சவ பிரதம குரு சிவாகம கலாமாமணி சிவஸ்ரீ.ஜெயராம நிதர்சன் குருக்களினால் நடாத்தப்படும்.திருவிழாக் காலங்களில் அடியார்கள் ஆலயம் வருகை தந்து வழிபட்டு திருவருள் பெறுமாறு ஆலய நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளனர்.