மட்டு. மக்கள் பயணக் கட்டுப்பாட்டிற்கு பூரண ஒத்துழைப்பு

0
214

நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதால் மட்டக்களப்பு மாவட்டம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றது.

இதேவேளை வீதிகளில் பாதுகாப்புத் தரப்பினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டில் கோவிட் தொற்று பெரும் ஆபத்தாக மாறியுள்ள நிலையில், நாடு முழுவதுமான பயணக்கட்டுப்பாடு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, தற்போது விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையானது, நாளை அதிகாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாளை அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்படும் பயணத் தடை 19 மணித்தியாலங்களின் பின்னர் நாளை இரவு பதினொரு மணிக்கு மீண்டும் நாடளாவிய ரீதியில் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாளை இரவு 11 மணிக்கு நடைமுறைக்கு வரும் நாடளாவிய ரீதியிலான பயணத் தடை எதிர்வரும் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 4.00மணி வரை நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்க்படப்டுள்ளது.