மட்டு.மாவட்டச் செயலகமும் சமய சமூக
கலாசார ஒன்றியமும் நடாத்திய உழவர் விழா

0
160

மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் மாவட்ட சமய சமூக கலாசார ஒன்றியமும் இணைந்து நடாத்திய தைப்பொங்கல் உழவர் விழா இன்று மாவட்டச் செயலகத்தில்
இடம் பெற்றது
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலக முன்றலில் நடைபெற்ற நிகழ்வில், ஆன்மீக அதிதியாக கிழக்கு இலங்கை இந்து குருமார் ஒன்றியத்தின் தலைவர்
சிவஸஸ்ரீP லோகநாதன் குருக்கள் கலந்துகொண்டார்
அதிதிகள் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட அரசாங்க அதிபரினால் நந்திக்கொடி ஏற்றப்பட்டு, மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
பாரம்பரிய முறைப்படி உரலில் அரிசி குற்றி பிரதான பொங்கல் பானைக்கான அரிசியினை மாவட்ட அரசாங்க அதிபர் இட்டதுடன்,
பொங்கல் விழாவினை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன
நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்ஜினி முகுந்தன், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் இந்திராவதி மேகன்,
மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஆர்.காயத்திரி உட்பட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.