மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கராத்தே கழகங்களுக்கு இடையிலான போட்டி நடைபெற்ற நிலையில் அதில் பங்குபற்றிய வீரர்களை கெரவிக்கும் வகையிலான நிகழ்வு இன்று பெற்றி கராத்தே கழகத்தின் மண்டபத்தில் நடைபெற்றது.
பெற்றி கராத்தே கழகத்தின் தலைவர் மதனின் தலைமையில் கீழ் பிரதான பயிற்றுவிப்பாளர் சில்வாவின் வழிகாட்டலின் கீழ் பெற்றி கராத்தே கல்லூரியில் பயிற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன்கீழ் விளையாட்டுத்துறை அமைச்சினால் தேசிய விளையாட்டு நிகழ்வுக்கு இணைவாக மாவட்ட மட்டத்தில் விளையாட்டு நிகழ்வுகள் நடாத்தப்பட்டுவருகின்றன.
இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்ட மட்ட கராத்தே போட்டியில் பெற்றி கராத்தே கழகம் சார்பில் 17 வீரர்கள் பல்வேறு ரக கராத்தே போட்டிகளில் கலந்துகொண்டதுடன் 26பதக்கங்களை சுவீகரித்து சாதனை படைத்துள்ளனர்.
பெற்றி கராத்தே கழகத்தின் கராத்தே அணியின் தலைவர் ஆர்.கௌசீகன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.