மட்டு.வந்தாறுமூலை,விஸ்ணு மகா
வித்தியாலய மாணவர்களுக்கு கற்றலுக்கான
உதவிகள் வழங்கல்

0
218

மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வந்தாறுமூலை,விஸ்ணு மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 100மாணவர்களுக்கான கற்றல் செயற்பாட்டுக்கான உதவிகள் இன்று வழங்கப்பட்டன.
வந்தாறுமூலை,விஸ்ணு மகா வித்தியாலய அதிபர் செபஸ்தியான் மோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணத்திற்கான பிரதி தலைவரும் முன்னாள் பிரதிக்கல்விப்பணிப்பாளருமான கண.வரதராஜன், செயலாளர் ரொமிலா செங்கமலன், பொருளாளர் அக்கரைப்பாக்கியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் தலைவர் லிங்கன் சுதர்சன் மற்றும் அவரது பிள்ளைகளின் நிதி உதவியுடன் 100மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
கிழக்கு மாகாண மக்களின் கல்விமேம்பாடு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டை நோக்காக கொண்டு செயற்படும் சுவிஸ் உதயம் அமைப்பு பாதிப்புற்ற மக்களுக்கு பல்வேறு உதவி திட்டங்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.