மட்டக்களப்பு வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் 2001,2004 ஆம் ஆண்டில் கல்வி கற்ற பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பன வழங்கப்பட்டதுடன் வீடும் புனருத்தாரணம் செய்து கொடுக்கப்பட்டது.
தங்களுடன் கல்வி கற்று நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக உயிர்நீத்த சக மாணவ நண்பர்களின் ஆத்மா சாந்தி வேண்டி, வந்தாறுமூலை எழுச்சிக் கிராமம் பலாச்சோலையில் வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கே இவ் மனிதநேய உதவி வழங்கப்பட்டன.
விறகு வியாபாரம் செய்யும் ஒருவருக்கு துவிச்சக்கர வண்டியும், வெள்ளம் காரணமாக வீட்டில் வசிக்க முடியாமல் துன்பமடைந்த குடும்பமொன்றுக்கு வீட்டினை புனருத்தாரனம் செய்தும் உதவிகள் வழங்கப்பட்டன.
உதவிகளை வழங்கும் நிகழ்வில் முன்னாள் கோட்டக் கல்விப்பணிப்பாளர் அ.சுகுமார், பதிவாளர் திருமதி த.பஞ்சாட்சரம், உலகலாம் நூலாசிரியர் கலாநிதி ந.பிரதீபன் ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
Home கிழக்கு செய்திகள் மட்டு. வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலய பழைய மாணவர்களின் முன்மாதிரி வேலைத்திட்டம்