மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் விசேட பாதுகாப்பு கண்காணிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் ஓட்டமாவடி,வாழைச்சேனை பிரதேசத்தில் பொலிஸாரும், இராணுவமும் இணைந்து மக்கள் மத்தியில் கொரோனா நோய் தொடர்பான விசேட விழிப்பூட்டல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன் போது நூற்றுக்கணக்கான வாகனங்கள் சோதனை செய்யப்பட்டதுடன் முக கவசத்தினை முறையாக அணியாத பலருக்கு இதன் போது பொலிஸாரினால் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜீ.எஸ். ஜயசுந்தர தலைமையில் இடம்பெற்ற இவ் விழிப்பூட்டும் நடவடிக்கையில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சீ.ஐ.சந்திர குமார மற்றும் சித்தாண்டி இராணுவ படைப் பிரிவினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.