மட்டு.வாழைச்சேனை கிண்ணையடி
குட்டிக்காடு பிரதேசத்தில் ஒருவர் கைது

0
383

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் கிண்ணையடி குட்டிக்காடு எனும் காட்டுப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை ஊழல் ஒழிப்பு பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஏனையோர் தப்பி ஓடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 108500 மில்லி லீற்றர் கசிப்பு உற்பத்திக்கு பயன்படும் கோடாவும்,4500 மில்லி லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்தபண்டாரவின் வழிகாட்டலில் பிரதேசத்தில் இவ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர் மற்றும் பொருட்க்கள் அத்தனையும் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதி மன்றத்தில் சமர்பிப்பதற்கான நடவடிக்கையினை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுள்ளதுடன்
தப்பிச்சென்றவர்களை கைது செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.