மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான விணாயகபுரம் வாழைச்சேனை ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயத்தின் திருக்குளிர்த்தி திருச்சடங்கு உற்சவம் இன்று திருக்குளிர்த்தி ஆடல் வைபவத்துடன் நிறைவுபெற்றது.
கடந்த 26ம் திகதி அன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி தொடர்ந்து 5 நாட்கள் திருச்சடங்கு நடைபெற்று வந்த வருடாந்த திருச்சடங்கு இன்று பக்தர்களின் ஆரோகரா கோசங்களுடனும் சிலம்பு ஒலியுடளும் இடம்பெற்ற தீ மிதிப்பு வைபவத்துடன் நிறைவு பெற்றது.
உடுக்கு காவியம் பாடப்பட்டு தொடர்ந்து அம்பாளுக்கு விசேட பூசை இடம்பெற்று அம்பாள் உள் வீதி வலம் வந்து பக்தர்கள் புடை சூழ வெளியில் உள்ள திருக்குளிர்த்தி பாடும் இடத்திற்கு சென்று திருக்குளிர்த்தி பாடல் பாடப்பெற்று திருக்குளிர்த்தி வைபவம் இன்று சிறப்பாக நடைபெற்றது.திருச்சடங்கு நிகழ்வுகள் யாவும் ஆலய பூசகர் வே.தேவபிரகாசம் ஆலய நித்திய பூசகர் எஸ்.சிவராசா ஆகியோர்கள் நடாத்தி வைத்தனர்.