மட்டு.விமான நிலைய பிரதான வீதியின் 01ஆம்,02ஆம் குறுக்கு வீதிகள் புனரமைப்பு

0
155

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளின் அபிவிருத்திக்காக 2020ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி மூலம் மட்டக்களப்பு விமான நிலைய பிரதான வீதியின் 01ஆம் மற்றும் 02ஆம் குறுக்கு வீதிகளின் புனரமைப்பு பணிகள் இன்று காலை ஆரம்பித்துவைக்கப்பட்டன.

வட்டார உறுப்பினர் அ.கிருரஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் கலந்துகொண்டு வீதி அபிவிருத்தி பணியை ஆரம்பித்துவைத்தார்.

மாநகரசபையின் 20இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் இந்த வீதிகள் புனரமைப்பு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் மாநகரசபை உறுப்பினர் துரைசிங்கம் மதன் உட்பட பிரதேச கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாநகரசபையில் மாநகரசபையின் கட்டளை சட்டம் இலங்கை சோசலிச குடியரசின் சட்டம் மீறப்படுவது வெளிப்படையாகயிருந்தும் மாகாணசபை நிர்வாகம் அதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.