மட்டு.வெல்லாவெளி பிரதேசத்தில்
குடும்பம் ஒன்றுக்கு வீடு கையளிப்பு

0
190

திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் மட்டக்களப்பு போராத்தீவுப்பற்று வெல்லாவெளி பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கான வீடு கையளிக்கப்பட்டது. வாழ்வதற்கான இல்லறம் செயற்றிட்டத்தின் கீழ் வன்னி ஹோப் நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் அவுஸ்திரேலியா மெல்போனில் வசிக்கும் வைத்தியர் ரஞ்ஜன் நிதி அனுசரணையில் குறித்த வீடு நிர்மாணிக்கப்பட்டது.

வெல்லாவெளி பிரதேச செயலாளர் வன்னி ஹோப் நிறுவனத்திற்கு விடுத்த விசேட வேண்டுகோளின் அடிப்படையில்வெள்ளாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட விவேகானந்தபுரம் கிராமத்தில்   யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மிக நீண்டகாலம் மண் குடிசைகளில் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வந்த கனவனை இழந்த பெண் தலைமை தாங்கும் குடும்பத்திற்கே இந்த நிரந்தர வீடு நிர்மாணிக்கப்பட்டது.  

போராத்தீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி தலைமையில் இடம்பெற்ற வீடு கையளிக்கும் நிகழ்வில் வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. ரஞ்சன் சிவஞான சுந்தரம் மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் எம்.ரீ.எம்.பாரிஸ், வெல்லாவெளி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.