மத்தளவிலிருந்து சர்வதேச விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

0
102

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் ஏறக்குறைய இரண்டு வருடங்களின் பின்னர் இன்று (29) முதல் சர்வதேச சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
மத்தள விமான நிலைய அட்டவணையின்படி, கடைசியாக 2021 ஆம் ஆண்டு பயணிகள் விமானம் வந்துள்ளது.
இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக நிர்மாணிக்கப்பட்ட மத்தள ராஜபக்ஷ விமான நிலையம் கடந்த காலங்களில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்று விமான நிலையமாக பயன்படுத்தப்பட்டது.
நாட்டின் வான்வெளிக்கு மேலே பறக்கும் விமானங்கள் அவசரமாக தரையிறங்குவதற்கான விமான நிலையமாகவும் இது பயன்படுத்தப்பட்டது.
‘ரெட் விங்ஸ்’ விமான சேவைக்கு சொந்தமான போயிங் 777-200 ரக விமானம் 400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று காலை ரஷ்யாவில் இருந்து மத்தள விமான நிலையத்தை வந்தடைய உள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, ரெட் விங்ஸ் ஏர்லைன்ஸ் 2023 ஆம் ஆண்டு முதல் வாரத்திற்கு 2 விமான சேவைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.
அதனை 3 ஆக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.