மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ 17.8 மில்லியன் பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றல்

0
11

கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் 17.8 மில்லியன் ரூபா் பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

பிரான்ஸ், அமெரிக்கா, கனடா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து கண்டி, நீர்கொழும்பு, ஜா-எல, வெள்ளவத்தை, நுகேகொடை, தங்காலை, மஹியங்கனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய முகவரிகளுக்கான பொதிகள் கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தை வந்தடைந்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் சுமார் 20 பொதிகள் வந்துள்ளன. அவை உரிமை கோரப்படாததால், பொதிகளை பரிசோதிக்க 19 ஆம் திகதி தபால் மா அதிபரிடம் அனுமதி பெறப்பட்டது.

பரிசோதனையின் போது  14 பொதிகளில் 272 கிராம் குஷ், கஞ்சா போதைப் பொருளும்,  2,049 மெத்தம்பேட்டமைன் மாத்திரைகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

விசாரணைக்காக கைப்பற்ற போதைப்பொருட்கள் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.